Sunday, October 23, 2016

உட்புற-வெளிப்புற உறுப்புகள் / Inner-Outer Organs

உட்புற / வெளிப்புற உறுப்புகள்

நமக்கு தேவையான சக்தி இவ்வுலகத்திலிருந்து பல வழிகள் வாயிலாக நமக்கு கிடைக்கிறது . இதில் அனைவருக்கும் தெரிந்த சக்தி நாம் உண்ணும் உணவிலிருந்து கிடைக்கிறது . உணவை உண்டபின் அது ஜீரணம் அடைந்து அதிலிருக்கும் சத்துக்கள் சர்க்கரை சக்தியாக மாற்றப்பட்டு, எல்லா உறுப்புகளுக்கும் சென்று சேர்க்கப்படுகிறது . நாம் இப்போது அறிந்து கொள்ள வேண்டியது - மற்ற நான்கு மூல பொருள்களிலிருந்தும் வெளிப்புற உறுப்புகள் மூலமாக நமக்கு சக்தி கிடைத்துக்கொண்டிருக்கிறது எனபது தான் .

உட்புற / வெளிப்புற உறுப்புகள் - மேலும் படிக்க ...

உண்ணுதல் / Eating Food

உண்ணுதல்

நமது உடல் காற்று , நீர், மரம் , நெருப்பு, நிலம்  என்னும் ஐம்பெரும் சக்திகளினால் ஆனது (பஞ்ச பூத சக்திகள்). இந்த சக்திகளுக்குரிய முக்கிய உள்ளுறுப்புக்கள்  ஐந்து - இவைதான் உடலின் மற்ற அனைத்து உறுப்புக்களுக்கும் சக்தியையும் மற்ற பொறுப்புக்களையும் பிரித்து தருகின்றன.
உண்ணுதல் - மேலும் படிக்க ...

தூக்கம் எனும் அற்புத மருத்துவர் / Sleep - the Best natural curer

தூக்கம் எனும் அற்புத மருத்துவர்

உயிரினங்களின் வாழ்வில் அத்தியாவசியமான தேவைகள்- உணவு , நீர், தூக்கம். இவை மூன்றும் சரியாக இருந்தால் தான் உயிரும் உடலும் ஆரோக்கியமாகவும் இயல்பாகவும் இருக்க முடியும். பசிக்கு தேவையான உணவை மென்று சாப்பிடுதல் , தாகத்திற்கு தேவையான நீரை சப்பி அருந்துல் , ஓய்விற்க்கு தேவையான தூக்கத்தை தருதல் ..

தூக்கம் மேலும் படிக்க ...

கோடை வெப்பம் - பாதுகாப்பு / Protection from Summer Heat


கோடை வெப்பம் - பாதுகாப்பு

இன்றைய சூழ்நிலையில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து , நம்மால் அதன் தாக்குதலை தாங்க முடியாமல் நாம் செய்யும் சில செயல்கள் மறுபடியும் நம்மைத் தான் பாதிக்கின்றது . ஆகவே கோடையை சமாளிக்க சில எளிய வழிமுறைகள்...:
கோடை வெப்பம் - பாதுகாப்பு - மேலும் படிக்க ...

இரத்த ஓட்டமும் உயிரோட்டமும் / Blood-Liveliveness

இரத்த ஓட்டமும் உயிரோட்டமும் :


நம் உடல் எப்போதும் வேலை செய்துகொண்டே இருக்கிறது. அதற்காக சக்தி தேவைப்படுகின்றது . உணவு, தண்ணீர், காற்றின் மூலம் அந்த சக்தி கிடைக்கின்றது . அந்த சக்தியின் மூலம் வேலை செய்யும் போது உடலில் உள்ள செல்களில் கழிவுகள் உருவாகின்றன . அப்படி உருவாகும் கழிவுகளான வியர்வை , சளி , எச்சில் , மலம், ஜலம் போன்றவை உடனுக்குடன் வெளியேறிக் கொண்டே இருக்கின்றன .
இரத்த ஓட்டமும் உயிரோட்டமும் மேலும் படிக்க ... 

கண்கள் - பாதுகாப்பும் & இரக்கமும் / Eyes - Protection & Compassion

கண்கள் - பாதுகாப்பும் & இரக்கமும் :

மனிதனாக பிறந்த ஓவ்வொவருக்கும்  இருக்க வேண்டிய குணம்: இரக்க குணம் - அன்பு . இந்த குணம் தான் நம்மை அமைதியாகவும் நிம்மதியாகவும் வைத்திருக்க பெருமளவு உதவும். இந்த குணத்தை பிறந்த குழந்தைகளிடத்தில் அதிகம் காணலாம். ஆனால் அவர்கள் வளர வளர அன்பு/இரக்கம் இவை குறைந்து கோபம் /எரிச்சல் இவைதான் நிறைந்திருக்கும் .
எதனால் இந்த மாற்றம் ஏற்படுகின்றது  என்றால் , கண் பாதுகாப்பில் ஏற்படும் குறைபாடு முக்கிய காரணம்.
கண்கள் -மேலும் படிக்க ... 

குளித்தல் / Bathing


குளித்தல் / Bathing

நாம் நோய்களுக்கு காரணத்தை வெளியிலிருந்து தேடுவதை விட, நம்முடைய அன்றாட வேலைகளான குளித்தல் , பல் துலக்குதல், மலம்-ஜலம் கழித்தல் , உடல் பராமரிப்பு , நீர் குடித்தல் , தூங்குதல் , ஓய்வு எடுத்தல் , சாப்பிடுதல் , உடல் மூலம் செய்யும் வேலைகள் , மற்றும் மனதின் மூலம் செய்யும்  வேலைகள் போன்றவற்றை சரியாக செய்தால் போதும். ஆரோக் கியமாக இருக்கலாம். ஆனால் நாம் இவற்றை சரியாக செய்கிறோமா எனில், இல்லை என தெரியும். 
இவற்றின் சரியான செய்முறையை காண்போம் ... குளித்தல் மேலும் படிக்க ...