Friday, June 24, 2016

Food - Digestion - Prosperous / உணவு - செரிமானம் - செழுமை


மகாசக்தி 

உயிரின நல விழிப்புணர்வு இதழ் 1

ஆசிரியர் : ஹீலர் ப. பிரதாப் B.E., B.Acu.,M.Acu., Ad.Acu.,B.Ed(Acu)
pradap_p@yahoo.com


உணவு - செரிமானம் - செழுமை


இவ்வுலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் உணவு கண்டிப்பாக கிடைக்கும் (அந்த உயிர் இயற்கையோடு இணைந்து வாழும் போது). இந்த உணவு எப்போதும் நமக்கு எந்த வித சிரமமும் இன்றி கிடைத்துக் கொண்டே இருந்தால் நாம் செழுமையாக வளமையாக - நிம்மதியாக இருக்கிறோம் என்று பொருள். நமக்கு கிடைத்த உணவிலிருந்து நாம் எவ்வாறு முழுமையான சக்தியை பெற்று நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்பதைப் பார்க்கலாம்.



நாம் உண்ணும் உணவு வயிற்றை அடையும் முன்பே அதன் செரிமானம் ஆரம்பித்துவிடும். நாம் உணவை வாயில் வைத்தவுடன் அந்த சுவை நாக்கில் பட்டு நரம்புகள் மூலம் மூளையை அடைந்து அங்கிருந்து மண்ணீரலை அடைந்துவிடும். உடனே மண்ணீரல் அதற்குண்டான அமிலங்களை சுரக்கச் செய்து வயிற்றுக்கு அனுப்பும். உணவு வயிற்றை அடைந்ததுõ, 
அமிலங்கள் அந்த உணவை சிறு துகள்களாக உடைத்து அதிலிருந்து உணவுச்சத்தை எடுக்கும். 




பின்னர் அது சிறுகுடலுக்கு அனுப்பப்பட்டு உணவு மேலும் செரிமானம் அடைந்து உணவுச்சத்து சக்தியாக மாற்றப்பட்டு மற்ற உடல் பாகங்களுக்கு தேவைக்கேற்றவாறு அனுப்பி வைக்கப்படும். ஆகவே உணவு செரிமானம் அடைவதற்கு மண்ணீரலில் இருந்து முதலில் சக்தி வரவேண்டும். நாம் சாப்பிடும் உணவின் சுவைக்கு ஏற்றவாறு (அளவுக்கு ஏற்றவாறல்ல) மண்ணீரல் வேலை செய்கிறது. ஒரே சுவையாக இருந்தால் மண்ணீரலின் வேலை குறையும். பல்வேறு சுவைகளாக இருந்தால் மண்ணீரலின் வேலை அதிகரிக்கும்.


மண்ணீரல் தன் சக்தியை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் நாம் பல்வேறு சுவையுடைய உணவுகளை உண்ட பின் சோர்வாக உணர்வோம்.  
பல சமயங்களில் தூக்கம் வரும். இவ்வாறு பல சுவைகளை நாம் தொடர்ந்து உண்ணும் போது மண்ணீரல் தன் சக்தியை சிறிது சிறிதாக இழக்கும். மண்ணீரலால் செரிமானத்திற்குரிய அமிலங்களை சுரக்க முடியாது. கணையம் மண்ணீரலில் இருந்து சக்தியை பெற்று இன்சுலின் என்கிற வேதியல் பொருளை சுரக்கிறது. இந்த இன்சுலின் தான் உணவுச்சத்தை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்றுகிறது. மண்ணீரலில் சக்தி குறைவதால் இன்சுலின் சுரப்பும் தடைபடும். இதனால் உணவு முழுமையாக செரிமானம் ஆகாது (அதாவது உணவுச்சத்து சக்தியாக மாறாது). இது பல நாட்கள் தொடரும் போது நோய் உருவாகும் (செரிமானமாகாத உணவுப்பொருள் கெட்டுப்போய் கழிவாக மாறுவதால்).

நாம் பசி இல்லாத போது உணவு உட்கொண்டாலும் உணவு செரிமானம் ஆகாது. பசி இல்லை என்றால் உடலுக்கு சக்தி தேவையில்லை என்று பொருள். உடலுக்கு சக்தி தேவையில்லாத போது இன்சுலின் சுரக்காது. இதை ஆங்கில மருத்துவம் நீரிழிவு நோய் என்று கூறுகிறது. செயற்கையாக இன்சுலினை உடலுக்குள் செலுத்துகிறது. இது நோய்க்கான தீர்வல்ல.

நாம் உணவுப் பழக்கத்தை முறைப்படுத்தினாலே நோய் முற்றிலும் குணமடையும்.மண்ணீரலை நாம் ஒழுங்கான முறையில் பாதுகாத்துக் கொண்டால், நாம் உண்ணும் உணவு  முழுமையும் நல்ல முறையில் சக்தியாக மாற்றப்படும். மண்ணீரலின் குணமான செழுமை, அதாவது எல்லாவற்றிலும் நிறைவான தன்மை ஏற்படும். நம் தேவை அனைத்தும் கஞ்சத்தனம் இல்லாமல் பூர்த்தி செய்து கொள்வோம். எந்த வித கவலை வந்தாலும் அதை விட்டு நாம் சீக்கிரம் நிம்மதியான நிலைக்குத் திரும்புவோம்.



உணவுப் பழக்கத்தை முறைப்படுத்த 3 வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:


1. வாரத்திற்கு ஒரு முறையாவது விறகு அடுப்பில் சமைத்த உணவை சாப்பிட வேண்டும். விறகு அடுப்பில் நெருப்பு மஞ்சள் நிறத்தில் இருக்கும். மஞ்சள் நிறம் வயிற்றுக்கும், மண்ணீரலுக்கும் உரிய நிறம். ஆகவே விறகு அடுப்பில் செய்த உணவு சீக்கிரம் ஜீரணம் அடையும். மண்ணீரலின் வேலையும் குறையும். நாம் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.




தற்போதைய காஸ் அடுப்பில் வரும் நெருப்பின் நீல நிறமே அதிகமாக இருக்கும் . நீல நிறம் நமது சிறுநீரகத்தின் சக்தியை கெடுத்துவிடும் 




2.  அழுத்தச் சமைகலத்தில் (Pressure Cooker) சமைத்த உணவை உண்பதை தவிர்க்க வேண்டும். அழுத்தச் சமைகலம் உணவிலிருந்து வெளியேறும் நீராவியை வெளியில் தள்ளாமல் சமைகலத்திற்குள்ளேயே அடக்கி வைத்து அந்த உணவை வேக வைக்கிறது. இவ்வாறு உணவை சமைக்கும் போது நேரமும் எரிபொருளும் குறைகிறது. இந்த காரணத்தினால் அனைவரும் அழுத்தச் சமைகலத்தை பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இதில் சமைத்த உணவு மண்ணீரலுக்கு ஏற்றதல்ல. உணவு சமைக்கப்படும் போது அதிலிருந்து உருவாகும் நீராவியில் அந்த உணவின் இரசாயனங்கள் கலந்திருக்கும். அது வெளியே போக வேண்டும். அப்படி அது வெளியே போகாத போது இரசாயனம் பாத்திரத்தின் (உணவின்) உள்ளேயே தங்கி விடும். இதை ஜீரணிப்பது மண்ணீரலின் வேலை பளுவை அதிகரிக்கும். இது தொடரும் போது மண்ணீரலின் சக்தி குறையும். உணவு சரிவர ஜீரணம் ஆகாமல் நோய் உருவாகும். இதே நீராவி முறை தான் தேநீர் கொள்கலனிலும் பயன்படுத்தப்படுகின்றது. தேநீரிலிருந்து வெளியேறும் நீராவி கொள்கலன் உள்ளேயே இருப்பதால் அந்த தேநீர் உடலுக்கு ஏற்றதல்ல.

3. நாம் உண்ணும் உணவில் ஒரு சுவை மட்டும் இருக்கும் போது மண்ணீரல் அதற்குண்டான அமிலத்தை மட்டும் சுரந்தால் போதும். அதனால் மண்ணீரலின் வேலை குறையும். உணவும் சீக்கிரம் ஜீரணம் ஆகும். நாம் புத்துணர்ச்சியுடன் இருப்போம். அதாவது ஒருவேளை சாப்பாட்டிற்கு சாம்பார்/ ரசம் /தயிர் þ¾¢ø ²¾¡ÅÐ ´ý¨È ÁðÎõ சேர்த்துக் கொள்ளலாம்; கூட ஒரு காய் பொரியல் சேர்த்துக் கொள்ளலாம்;

தயிர் சாதத்திற்கு ஊறுகாய் வைத்து சாப்பிடும் போது பொரியல் தேவையில்லை. சாம்பாரில் ஒரு காய் மட்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி சேர்க்கும் போது பொரியல் தேவையில்லை. கீரை உணவு சாப்பிடும் போது வேறு எந்த காயும் சேர்க்கத் தேவையில்லை. ஏனென்றால் கீரை உணவு ஜீரணம் ஆவதற்கான நேரம் மற்ற உணவுகளை விட சற்று அதிகம்.


ஒரு வேளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சுவையை உண்ண வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது (திருமண சாப்பாடு) ஒரு சுவைக்கும் அடுத்த சுவைக்கும் இரண்டு-மூன்று நிமிடங்கள் இடைவெளி விட்டு சாப்பிடலாம். மாதத்திற்கு ஒரு நாள் மட்டும் ஆசைக்காக நிறைய சுவை சேர்க்கலாம். அன்றாட உணவாக இவற்றை சேர்ப்பது தவறு.









இட்லி என்றால் இட்லி மட்டும்; ஒரு சட்னி வகை சேர்க்கலாம்; சாம்பார் சேர்க்கக் கூடாது. தோசை என்றால் தோசை மட்டும்; ஒரு சட்னி அல்லது ஒரு சாம்பார் வகை சேர்க்கலாம். இட்லி, தோசை இவற்றை ஒன்றாக ஒரு வேளைக்கு சேர்த்துக் கொள்ளக்கூடாது. 

சத்து மாவு, பழக்கூட்டு(Fruits Salad), காய்கறி கலவை(Vegetable Salad) இவற்றை தவிர்க்க வேண்டும். இவற்றில் பலவகை சுவையுடைய தானியங்கள், பழங்கள், காய்கறிகள் சேர்க்கப்படுகின்றன. பலவகை சுவைகள் ஒன்றாக கலக்கின்றன. ஜீரணம் ஆவது மிகவும் கடினம். இதையெல்லாம் மனதில் வைத்துத் தான் பழங்காலத்தில் "விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு" என்ற பழமொழி இருந்துள்ளது. அதாவது விருந்து சாப்பாட்டில் பல சுவைகள் இருக்கும். தினமும் அதை சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல. இதை வலியுறுத்த இந்த பழமொழி பயன்பாட்டில் இருந்துள்ளது. நாம் சாப்பிடும் பொருளில் நிறைய மசாலா பொருட்கள் (பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய்) சேர்ப்பதும் மண்ணீரலுக்கு அதிக வேலை பளுவை கொடுக்கும்.



நமக்கு பள்ளிகளில் உணவை மற்றவர்களுடன் பகிர்ந்து உண்ண வேண்டும் என்று கூறியிருப்பார்கள். அவ்வாறு பகிர்ந்து உண்ணுவதும் தவறு. இவற்றிலும் பல சுவைகள் கலந்துவிடும். மண்ணீரலுக்கு எந்த சுவையிலிருந்து முதலில் சத்தை எடுக்க வேண்டும் என்பது தெரியாது; எதை முதலில் ஜீரணம் செய்வது என்பதிலும் குழப்பம் உருவாகும். இதனால் மண்ணீரல் செய்வதறியாது அப்படியே நின்றுவிடும். மண்ணீரலின் சக்தி உணவை ஜீரணம் செய்வதற்கும், நாம் பார்க்கும், கேட்கும் விஷயங்களை உள்வாங்கி, கிரகித்து அதை நினைவில் வைத்துக்கொள்வதற்கும் தேவைப்படுகிறது. அதனால் நாம் ஒரு சுவை கொண்ட உணவை உட்கொள்ளும் போது மண்ணீரலின் சக்தி அதிகம் ஜீரணத்திற்காக செலவிடப்படாமல் பாதுகாக்கப்பட்டு, விஷயங்களை கிரகித்து வைக்கப் பயன்படுகிறது. இது படிக்கும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது. நன்றாக படிப்பார்கள்.

நாம் உணவு உட்கொண்ட பின் இனிப்பான பொருளை எடுத்துக்கொண்டால் மண்ணீரலின் சக்தி அதிகமாகும். இயற்கை இனிப்புகளான பனங்கற்கண்டு, பனை வெல்லம் போன்றவை சாப்பிடலாம்; வேர்கடலை மிட்டாய் சாப்பிடலாம். நாம் வாழும் இடத்திற்கு ஏற்ற உணவு வகையை சாப்பிட வேண்டும். நம் தென்இந்தியாவில் கோடை காலம், குளிர் காலம் இவற்றிற்கு இடையே அதிக வேறுபாடு கிடையாது. எப்போதும் சூடாகவே இருக்கும். அதனால் கோதுமை உணவை அளவோடு தான் சேர்க்கவேண்டும். வாரத்திற்கு ஒரு நாள் சேர்ப்பது நல்லது. ஆனால் வடஇந்தியாவில் குளிர் காலத்தட்பவெப்பநிலை மிகவும் குறைந்து காணப்படும். இங்கு வசிப்பவர்கள் கோதுமை உணவை அதிகம் சேர்ப்பது நல்லது.




இவ்வாÈ¡க நாம் மண்ணீரலை பாதுகாக்கும் போது நம் உடலும் மனமும் நல்ல நிலையில் இருக்கும்; நோயற்ற வாழ்க்கை வாழலாம். நல்ல எண்ணங்களுடன் நமக்கும் நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் நல்லது செய்து செழுமையுடன் இருக்கலாம்.

இயற்கையே(சக்தியே) சரணம் 



No comments:

Post a Comment