Wednesday, June 22, 2016

Water / நீர்

மகாசக்தி 






                                                  உயிரின நல விழிப்புணர்வு இதழ் 1
ஆசிரியர் : ஹீலர் ப. பிரதாப் B.E., B.Acu.,M.Acu., Ad.Acu.,B.Ed(Acu)
pradap_p@yahoo.com

நீர்

நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு.





     "எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால்
, மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்."


இக்குறளில் உள்ளது போல் நீர் தான் இவ்வுலகின் ஆதாரம். இதையே நாம் அக்குபஞ்சர் தத்துவத்திலும் காணலாம்.

அக்குபஞ்சர் தத்துவத்தின் படி பஞ்சபூதங்களில் ஒன்றான நீர் சிறுநீரகத்திற்கும், சிறுநீர் பைகளுக்கும் சக்தி அளிக்கிறது. ஒரு உயிர் உருவாவதற்கு முக்கிய காரணமாக சிறுநீரகம் இருப்பதனால், நீரும் மிக முக்கியமானதாகிறது. உணவு, நீர், காற்று இவை மூன்றும் நாம் உயிர் வாழ தேவையான சக்தியை அளிக்கிறது.

    உணவு, காற்று இவை இரண்டிலும் நீர் சக்தி தான் கலந்துள்ளது. ஆகவே நீர் இன்றியமையாததாகிறது. இவ்வளவு முக்கியமான நீர் மிகவும் ¿øÄ¾¡¸ இருத்தல் அவசியம். நம்பிக்கையும், பயமும் சிறுநீரகத்திற்கான உணர்வும், உணர்ச்சியும் ஆகும். நீர் எவ்வளவு ¿øÄ¾¡¸ இருக்கிறதோ அவ்வளவு நம்பிக்கை நம்மிடையே இருக்கும். நீரின் தன்மை குறைய குறைய நம்பிக்கையற்று பயம் என்ற உணர்ச்சி வந்துவிடும். நம்பிக்கை குறையும் போது நம்மிடையே கவலை (நிலம்), துக்கம் (காற்று), பொறாமை (நெருப்பு), கோபம் (மரம்) என்ற ஏனைய உணர்ச்சிகளும் வந்துவிடும். இத்தகைய உணர்ச்சிகாளால் நாம் மனிதத் தன்மையை இழப்போம்.


சிறுநீரகம் நன்றாக வேலை செய்ய வேண்டுமென்றால் நீர் சக்தி அதற்கு ஒழுங்காக கிடைக்க வேண்டும். நீர் சக்தி கிடைக்கவில்லை என்றால் சிறுநீரகம் ஒழுங்காக நல்ல முறையில் வேலை செய்யாது. சிறுநீரகம் எலும்பு மஜ்ஜைகளுக்கு சக்தி அளிக்கிறது. இரத்த சிகப்பணுக்கள் எலும்பு மஜ்ஜைகளிலிருந்து உருவாகிறது. சிறுநீரகம் சக்தியற்று இருக்கும் போது இரத்த சிகப்பணுக்கள் நல்ல முறையில் வலிமையானதாக உருவாக முடியாது. இதனால் நமக்கு சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களான கல் , அடைப்பு , அடிக்கடி சிறுநீர் கழித்தல் , செயலிழப்பு உருவாகும் 
இன்றைய காலகட்டத்தில் நாம் அருந்தும்/உணவிற்காக பயன்படுத்தும் நீரை மக்கள் சுத்தீகரிப்பு என்ற பெயரில் பல்வேறு கட்டங்களுக்கு உற்படுத்தி நீரின் இயற்கைத்தன்மையை அழித்து விடுகின்றனர். இயற்கைத்தன்மை அற்ற, உயிறற்ற நீரைத் தான் நாம் பயன்படுத்துகிறோம். அதில் எந்த பயனும் இல்லை.

நாம் இப்போது அருந்தும் நீரை பல வகையாக பிரிக்கலாம்.
  1. UV Filtration / புற ஊதா கதிர்கள் வடிகட்டிய நீர் 
  2. Chlorine Water / குளோரின் நீர் 
  3. Ice Water / குளிர்சாதன  பெட்டி  நீர்
  4. Reverse Osmosis (RO) Filtration / சவ்வூடு வடிகட்டி 
  5. Hot Water / வெந்நீர் 


 UV Filtration /புற ஊதா கதிர்கள் வடிகட்டிய நீர் 

புர ஊதா கதிர்களின் மூலம் தண்ணீரை சுத்தப்படுத்தும் இந்த முறையால் தண்ணீரில் உள்ள நுண்ணுயிரிகளின் மூலக்கூறுகள் செயலிழக்கப்படச் செய்து அது மேலும் இனப்பெருக்கம் செய்யாமல் தடுக்கப்படுகிறது. அந்த மூலக்கூறுகளின் இணைப்பு உடைக்கப்படுகிறது. இம்முறையால் கிடைக்கப்பெறும் தண்ணீரின் தன்மை மிகவும் கொடியது. இறந்த உயிரினங்களை (கழிவுகள்) நாம் குடிக்கிறோம். இதனால் நமக்கு எந்த உபயோகமும் இல்லை. தீங்கு தான் அதிகம். ஏனென்றால் தண்ணீரின் உயிர்த்தன்மை கெடுக்கப்படுகிறது. இயற்கையான தண்ணீரில் உள்ள நுண்ணுயிரிகளினால் உடலுக்கு எந்த விதமான கேடும் இல்லை.


RO Filtration/புற ஊதா கதிர்கள் வடிகட்டிய நீர்  
சவ்வூடுபரவல் பின்னோக்கு முறை மூலம் தண்ணீரை சுத்தம் செய்யும் போது இயற்கையான தண்ணீருக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. பின்னர் அது மெல்லிய மென்படலத்தின் (semipermeable membrane) வழியாக செலுத்தப்படுகிறது. இந்த மென்படலம் பல வேதியியல் பொருள்களினால் ஆனது. தண்ணீர் இதனுள்ளே செல்லும் போது கண்டிப்பாக வேதியியல் மாற்றம் நடைபெரும். தண்ணீரின் இயற்கைத்தன்மை அழிக்கப்படும். இது உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்ல.

Chlorine Water / குளோரின் நீர் -
நாம் Chlorine தண்ணீரை குடிக்கும் போது hypochlorous, hydrochloric அமிலங்களை தான் குடிக்கிறோம். அதன் வேதி சமன்பாட்டை கீழே காணலாம்.
Chlorine + Water → Hypochlorous Acid + Hydrochloric Acid
Cl2 + H2O → HOCl + HCl

இதிலிருந்து நீர் சக்தி ஒரு துளி அளவும் நமக்கு கிடைக்காது. அதனால் நம்பிக்கை குறைந்து சந்தேகம் தலைதூக்கும். இயற்கையான தண்ணீரில் Chlorine என்னும் இராசயனத்தைக் சேர்க்கிறார்கள். (அது கிருமிகளை அழிக்கும் என்ற எண்ணத்தில்.) மலைகளிலிருந்து உருவாகும் ஆறுகளில் உள்ள நீரையும், மழை பெய்யும் போது செயற்கையான குளங்களில் சேகரிக்கப்பட்ட நீரையும் நாம் பயன்படுத்துகிறோம். அப்படிப்பட்ட நீரில் பறவைகளின் எச்சங்கள்மிருகங்களின், மனிதர்களின் கழிவுகள் ஆகியவை கலந்து இருக்கும். இவைகளினால் மனிதனுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற நல்லெண்ணத்திணால் நீரில் Chlorine சேர்க்கிறார்கள். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறதென்றால், நீரின் தன்மை மிருகங்கள், பறவைகள் இவைகளினால் கெடுவதில்லை; Chlorine சேர்ப்பதால் மட்டுமே கெடுகிறது.


Hot Water /வெந்நீர் -

நாம் தண்ணீரில் உள்ள கிருமிகள் அழிய வேண்டும் என்பதற்காக அதை சூடு செய்கிறோம். ஆனால் அப்படி செய்யும் போது நீர் ஆவியாகிறது. அதாவது நீர் மூலக்கூறுகள் உடைந்து அதிர்வுகள் மிகுதியாகிறது; அது இயற்கைத்தன்மையை இழக்கிறது. நீரின் உயிர்சக்தி அழிகிறது. அந்த நீரை நாம் பருகும் போது சக்தி நமக்கு கிடைப்பதில்லை.

Ice Water / குளிர்சாதன  பெட்டி  நீர்-

நாம் தண்ணீரை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து குளிர்ந்த நீராக பருக விரும்புகிறோம். அப்படி வைக்கும் போது குளிர்சாதனப்பெட்டியிலுள்ள Freon-12 (CCl2F2) என்னும் வாயு தண்ணீரோடு சேர நேரிடும். அப்போது நீரில் உள்ள உயிர்த்தன்மை அழிக்கப்படும். இந்த வாயு ஓசோன் மண்டலத்திலேயே ஓட்டை ஏற்படுத்துகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மிகப்பெரிய ஓசோன் மண்டலத்திற்கே இந்த கதி என்றால், நம் உடல் என்னவாகும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

இவ்வாறாக நாம் அருந்தும்/உபயோகப்படுத்தும் நீர் பல வழிகளில் கெடுகிறது. இவற்றில் நாம் Chlorine நீரை மட்டும் இயற்கையான நிலைக்கு திரும்ப கொண்டுவர முடியும். மற்றவைகளை இயற்கை நிலைக்கு திருப்ப முடியாது.
Chlorine கலந்த நீரை மண் பானையில் வைத்தால் Chlorine இரசாயனம் தனியாக பிரிந்து பானையின் வெளிப்புÈத்தில் வெள்ளை நிபடிவங்களாக, திட்டுகளாக தங்கிவிடும். பானையின் உள்ளே இருக்கும் நீரும் இயற்கையாக குளிர்ந்துவிடும். பானையை மண் தட்டினால் மூடி வைக்கலாம்; அல்லது மூடாமலும் வைக்கலாம். மண்ணால் ஆன பானைகளில் காற்று மூலப்பொருள் உள்ளே சென்று வர சிறுசிறு துவாரங்கள் இருக்கும். இதன் மூலம் நீர் கசிவு ஏற்பட்டு காற்றுடன் நீர் சேரும் போது நீர் சுத்தமாக்கப்படுகிறது. நீர் கசிவு ஏற்படுவதால் பானையின் அடியில் கோனிப்பையையோ அல்லது மணலையோ வைக்கிறார்கள். காற்று மூலப்பொருள் உள்ளே செல்வதனால் நீர் குளிர்ந்துவிடுகிறது. மேலும் குளிர்ச்சி வேண்டுபவர்கள் பானையை காற்றாடியின் கீழ் வைக்கலாம்.
தண்ணீரை மற்ற மூலப்பொருட்கள் இயற்கையாகவே பல வழிகளில் சுத்தப்படுத்துகின்றன. மனிதன் தனியாக சுத்தப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. 
நாம் தண்ணீருக்காக கிணறு வெட்டுகிறோம். அது திறந்தே இருக்கிறது. காற்று மண்டலத்துடன் நேரடி தொடர்பில் அந்த தண்ணீர் இருப்பதனால் இயற்கையாகவே சுத்தமாக இருக்கிறது. காற்று மண்டலத்தில் சிறிது வெப்பமும் கலந்திருப்பதனால் நீர் மிதமான சூட்டுடன் உயிர்ப்புள்ளதாக இருக்கிறது.
சதுப்பு நிலக்காடுகள் - இவ்வகை காடுகளில் உள்ள மரங்கள் தண்ணீரில் உள்ள உப்பு, மற்றும் பிற பொருள்களை எடுத்துவிடும். அதன் இலைகளில் உள்ள துளைகள் இந்த பொருட்களை மரங்களுக்குள் அனுப்பாமல் வெளியிலேயே தடுத்துவிடுகிறது.
சில இடங்களில் நிலத்தடி நீரை எடுப்பதற்காக பூமிக்கு அடியில் குழாய் போடுகிறார்கள். பூமிக்கு அடியில் இருக்கும் நீர் காற்று மூலப்பொருளுடன் சேராத காரணத்தால் உபயோகப்படுத்துவதற்கு உகந்ததல்ல. அதனால் அந்த நீரை எடுத்தவுடன் ஒரு பாத்திரத்தில் (பானையில்) ஒரு நாளைக்கு மூடாமல் வைத்தால் அதில் இருக்கும் உப்புத்தன்மை மறைந்து உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதாகி விடும். (குறிப்பு: பிளாஸ்டிக் கொள்கலன்களில் தண்ணீர் சேகரிக்கக் கூடாது.) நிலத்தடி நீரை விவசாயத்த்ற்கு பயன்படுத்தும் போது கூட அந்நீரின் கழிவுகள் நீங்குவதற்காக அதை கிணற்று நீருடன் சேர்த்து தான் பயன்படுத்துவார்கள்.
நிலத்தடி நீரை மேல்நிலை தொட்டியில் ஏற்றி உபயோகப்படுத்த வேண்டுமென்றால் அந்த தொட்டியை திறந்து வைக்க வேண்டும். அப்படி திறந்து வைக்கும் போது அதிலுள்ள தண்ணீர், காற்று மூலப்பொருளுடன் கலந்து பயன்படுத்துவதற்கு ஏதுவாக மாறும். திறந்து வைப்பதனால் அதில் படரும் தூசு கூட இயற்கையான முறையில் சுத்தமாகும்.

நீரை பஞ்சபூதங்கள் சுத்தப்படுத்துவது போல் நீரால் மற்றவையும் பயனடைகின்றன. நீர் தான் பஞ்ச பூதங்களுக்கு ஆதாரமும் கூட:
நீர் + மண் (நிலம்)          - செடிகள் வளரும்
நீர் +காற்று                    - குளிர்ந்த காற்று கிடைக்கும்
நீர் + நெருப்பு                 - மிதமான சூடு கிடைக்கும்
நீர் + மரம்                     - உணவு (பழங்கள்) கிடைக்கும்


நமக்கு நீர் சக்தி முழுமையாக கிடைக்க சில வழிகள்:

1.  மண் பானை தண்ணீர் குடிக்கலாம்.

2.  மண்ணால் ஆன குளிர்சாதனப்பெட்டி உபயோகப்படுத்தலாம். காய்கறிகள், பழரசங்கள் ஆகியவற்றை இதில் வைத்து உபயோகப்படுத்தலாம். பழரசத்தை இதில் வைத்து குடிக்கும் போது குளிர்ச்சியாக இருக்கும்.

3.  தண்ணீரை பிளாஸ்டிக் கொள்கலன்களில் வைக்காமல் செம்பு, பித்தலை, வெண்கலப் பாத்திரங்களில் வைத்து உபயோகப்படுத்தலாம்.

4. மின்விசிறியின் அடியில் தண்ணீர் பாத்திரத்தை வைத்தால் காற்றோட்டம் அதிகமாகி தண்ணீர் நன்கு சுத்தமாகும். குளிர்ச்சியாகவும் இருக்கும்.

5. காலை எழுந்தவுடன் தண்ணீர் தாகம் எடுத்தால், பானைத்தண்ணீர் தான் குடிக்க வேண்டும். அது தான் உடலில் உள்ள சூட்டை தணித்து குளிர்ச்சியைக் கொடுக்கும்; அல்லது எலுமிச்சை சாறு நாட்டு சர்க்கரை (புளிப்பை எடுப்பதற்காக) போட்டு குடிக்கலாம். அறை மணி நேரம் கழித்து தேனீர், குளம்பி விருப்பப்பட்டால் பால் இல்லாமல் குடிக்கலாம்.

6. சளி, காய்ச்சல் இருக்கும் போது கூட மண்பானை தண்ணீர் தான் குடிக்க வேண்டும்.


          இயற்கையே(சக்தியே) சரணம் 



No comments:

Post a Comment