Saturday, June 25, 2016

Nature-Health / இயற்கை - நலம்/நன்மை

மகாசக்தி 


இயற்கை - நலம்/நன்மை 


உயிரின நல விழிப்புணர்வு இதழ் 1

ஜூன் 1-15 2014
ஆசிரியர் : ஹீலர் ப. பிரதாப் B.E., B.Acu.,M.Acu., Ad.Acu.,B.Ed(Acu)
pradap_p@yahoo.com

      
இயற்கை நலம் 



                         

நாம் ஆரோக்கியமாக இருப்பதை, நாம் எந்தவித கஷ்டமும் இல்லாமல் நம் அன்றாட வேலைகளை செய்வதின்  மூலம் அறிகின்றோம். மூச்சு விடுவது, இருதயம் துடிப்பது, கண் இமைப்பது, மலம்/ஜலம் கழிப்பது போன்ற நம்     கட்டுப்பாட்டில் இல்லாத வேலைகளை நம் உயிர் உடலின் வழியாக சீராக செய்கின்றது. எப்பொழுது நாம் நம் அன்றாட வேலைகளை செய்யும்பொழுது சிரமங்களை உணருகிறோமோ, அப்பொழுது நாம் நோயுடன் இருப்பதை அறிகிறோம். 



நோயின் தாக்கங்களாக நாம் அறிவன: வலி, அரிப்பு, எரிச்சல்,  சளி , உடல்சூடு(காய்ச்சல்), வாந்தி-பேதி, புண் ,  மலம், ஜாலம்(சிறுநீர்), குத்தல், குடைச்சல், நமச்சல் , ,மரத்துப்போதல், தும்மல், வியர்வை, எச்சில் , கண்-பித்தநீர், காது-அழுக்கு - இவைகள் எல்லாம் நம் உடலின் உள்ளிருந்து வெளியே வருகிறது. வெளியேறியபின் நம் சுகமாக உணருகிறோம். 




இதில் சளியை உதாரணமாக எடுத்துக்கொண்டால் - அதன் முதல் அறிகுறி தும்மல். தும்மலின் பொது என்ன நடக்கிறது? நமது உடலில் தேவையில்லாத குப்பை காற்றின் மூலமாக மூக்கின் வழியாக நுரையீரலை சென்றைடையும்போது , அதை சுத்தம் செய்ய நிகழும் ஒருவித செயல்தான் தும்மல். ஆக,   தும்மல் நன்மைக்கே.









ஆனால் நாம் அதை தவறாக புரிந்துகொண்டு தும்மலை மருந்துகளினால் அடக்கும் பொழுது அது சளியாக மாறி மூக்கின் வழியாகவும் , வாய் வழியாகவும் வெளியேறுகிறது.  









ஆனால் நாம் மறுபடியும் தவறாக புரிந்துகொண்டு சளியை மருந்துகளினால் அடக்கும் பொழுது அது இருமலாக மாறுகிறது.








இருமலை அடக்கினால் காய்ச்சலாகவும், 













காய்ச்சலை அடக்கினால் சளி கட்டி பின்னாளில் ஆஸ்துமாகவும், 









காச நோயாகவும் ,













நுரையீரல் புற்று நோயாகவும் மாறுகிறது.












இதில் இருந்து நாம் அறிவது : நோய்கள் அனைத்தும் நமக்கு நல்லதே செய்கின்றன. 

நம்முடைய அவசரத்தினாலும் அறியாமையினாலும் , சாதாரணமாக உள்ள நோயின் அறிகுறியை உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக மாற்றிவிடுகிறோம்.


இரத்த ஓட்டமும் உயிரோட்டமும் :
நம் உடல் எப்பொழுதும் வேலை செய்து கொண்டே இருக்கிறது . அதற்காக சக்தி தேவைப்படுகின்றது . உணவு, தண்ணீர், காற்றின் மூலம் அந்த சக்தி கிடைக்கிறது . அந்த சக்தியின் மூலம் வேலை செய்யும் பொழுது உடலில் உள்ள செல்களில் கழிவுகள் உருவாகின்றன . அப்படி உருவாகும் கழிவுகளான வியர்வை , சளி , எச்சில் , மலம், ஜலம் போன்றவை உடனுக்குடன் வெளியேறிக் கொண்டே இருக்கின்றன.


உடலின் உள்ளே உள்ள உறுப்புகளில் உருவாகும் இந்த கழிவுகளை , கழிவு வெளியேற்றும் உறுப்புகளான தோல் , மூக்கு, ஆசனவாய் (மலம்) , வாய் , சிறுநீர்க்குழாய் போன்ற உறுப்புகளுக்கு சென்று சேர்க்கும் வேலையை இரத்தம் செய்கிறது. இதனால் இரத்தத்தில் ஆற்றலுடன் கழிவுகளும் சேர்ந்தே இருக்கும். இரத்தம் தேங்காமல் எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் . இதற்காக இருதயம் துடிக்க வேண்டும். இருதயம் துடிப்பதற்கான சக்தி தான் பிரதான சக்தியாகும். இதுவே உயிர்சக்தி ஆகும். இதிலிருந்துதான் உயிரோட்டம் பிறக்கிறது.  இந்த உயிரையோட்டத்தினால் தான் இரத்தம் ஓரிடத்தில் நிற்காமல் உடலின் அனைத்து பாகங்களுக்கும் போக முடிகிறது. கழிவுகளும் ஒழுங்கான முறையில் வெளியேறி நாம் ஆரோக்கியமாக இருக்கின்றோம் . 

எப்பொழுது உயிரோட்டத்தில் தடை ஏற்படுகின்றதோ , அப்பொழுது இரத்த ஓட்டத்திலும் தடை ஏற்படுகின்றது . கழிவுகள் தேங்க ஆரம்பிக்கின்றது. இயல்பாக சரியான அளவில் வெளியேறிக்  கொண்டிருந்த கழிவுகளான வியர்வை, எச்சில் , சளி , மலம், ஜலம், ஆகியவை தடையின் காரணமாக அதிகமாக சேர்ந்து விடுவதால் - உடல் உறுப்புகள் கழிவுகளை வெளியேற்றுவதற்காக போராடுகின்றன . அதை நாம் கஷ்டமாக உணருகிறோம்.இதுவே நோய்க்கான ஆரம்பம்.



நம் உயிரோட்டத்தில் எப்பொழுது பாதிப்பு ஏற்படுகின்றதெனில் , நம் மனதில் குணக்கேடுகள் உருவாகும்பொழுது தான் . மனதில் எப்பொழுதும் நல்ல குணங்களான அன்பு, இரக்கம், அமைதி, நம்பிக்கை, பொறுமை, போன்ற உணர்வுகளை மட்டுமே  கொண்டிருந்தால் உயிரோட்டம் பாதிப்படையாது . உயிரோட்டம் பாதிப்படையாத போது மனதில் கழிவுகள்  தேங்காது - மனதில் கழிவுகள் ஏற்படவில்லை எனில் இரத்தத்தில் கழிவுகள் ஏற்படாது.உயிர்சக்தி நன்றா இருக்கும் . மாறாக மனித குணக்கேடுகளான கோபம்,பயம் , துக்கம், கவலை, பொறாமை , அவசரம், அவ நம்பிக்கை போன்ற உணர்ச்சிகளை கொண்டிருந்தால் கழிவுகள் அதிகமாகும் . உயிரோட்டத்தில் தடை ஏற்பட்டு இரத்தத்தில் கழிவுகள் தேங்கும் - நோயின் தாக்கம் ஏற்படும் . 




உயிரோட்டம் என்பது கண்களால் பார்க்க முடியாத ஒன்று. அதை நாம் உணர மட்டுமே முடியும். இரத்தம் என்பது கண்களால் பார்க்கமுடியும். ஆனால் கண்ணால் பார்க்க முடியாத உயிர் தான் கண்ணால் பார்க்ககூடிய இரத்தத்தை கட்டுப்படுத்துகிறது . உயிர் இல்லை எனில் இரத்த ஓட்டம் நடைபெறாது.

ஆக இதிலிருந்து நாம் அறிவது - இரத்தத்தில் பிரச்சினை எனில் இரத்தத்தை மட்டும் சரி செய்வது போதாது. அதன் மூலமான உயிரோட்டத்தில் உள்ள பிரச்சினையை சரி செய்தல் தான் சரியாகும்.

நோய்கள்  அனைத்தும் இரத்தத்தில் தெரிந்தாலும் அதன் மூலம் உயிரில் உள்ள(மனசு) பிரச்சினைகள்தான் . ஆக உயிரின் பிரச்சினையை சரி செய்தால் தான் இரத்தம் சுத்தமாகும்- கழிவுகள் தேங்காது. இரத்தத்தை மட்டுமே சரிசெய்தால் அதன் மூலமான உயிரிலிருந்து மறுபடியும் பிரச்சினைகள் இரத்தத்தில் வந்து சேர்ந்து கொண்டே இருக்கும். 


இரத்தத்தை சரிசெய்யும் பொழுது அதன் மூலமான உயிரில் உள்ள பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும் . ஆனால் நாம் கண்ணில் தெரியக்கூடிய மருந்து-மாத்திரை-ஊசிகளை வைத்துக் கொண்டு இரத்தத்தை மட்டும் சுத்தம் செய்து கொள்கிறோம். ஆகவே மருந்துகளை சாப்பிட்டதும் இரத்தத்தில் உள்ள பிரச்சினைகள் தற்காலிகமாக சரியாகும். ஆனால் அதன் மூலமான கண்ணுக்கு தெரியாத உயிரோட்டத்தை சரி செய்யாததால் மருந்தின் வீரியம்  குறைந்ததும் உயிரிலிருந்து பிரச்சினைகள் இரத்தத்தை வந்து சேருகின்றன. நாம் எதற்க்காக மருந்து சாப்பிட்டோமா அந்த பிரச்சினை மறுபடியும் வரும். மேலும் மருந்துகள் அனைத்தும் செயற்கை இரசாயனங்கள் மூலம் உருவாக்கப்பட்டவை என்பதனால் அவை அதற்க்கேற்ப மேலும் கழிவுகளை உருவாக்குகின்றன . உடலின் உயிரோட்டம் குறைவாக இருப்பதனால் இந்த மருந்து கழிவுகளும் இரத்தத்தில் தேங்கி மேலும் கஷ்டங்கள் அதிகரிக்கின்றன.


 ஆக ஒரு உடலில் உள்ள நோயை சரி செய்ய இரத்தத்துடன் உயிரையும் சரி செய்ய வேண்டும் . ஆனால் கண்ணுக்கு தெரியும் மருந்து மாத்திரைகள்  கண்ணுக்கு தெரியாத உயிரோட்டத்தை சரி செய்ய வாய்ப்பில்லை . 

ஆனால் நமது சக்தி மருத்துவத்தில் இரத்தத்திற்கு கைவிரலின் மூலமாக மின்காந்த அலைகளையும், மனதில் செய்யும் ஹீலிங் மூலம் உயிரோட்டத்திற்கும் சிகிச்சை அளித்து நோயின் பிரச்சினைகளை முழுமையாக குணப்படுத்த முடியும் . இந்த சிகிச்சையின் மூலம் கழிவுகள் வெளியேற்றும் தானாக நடைபெறும். கண்ணுக்கு தெரியாத உயிருக்கு சிகிச்சை அளிப்பதனால் சிகிச்சையும் கண்ணுக்கு தெரியாது - உணர முடியும். சிகிச்சை பலனாக உயிரோட்டம் அதிகமாகும் . 
மனதும் அமைதியடையும் - நோயும் குணமாகும் . 

இயற்கையே(சக்தியே) சரணம் 















No comments:

Post a Comment